செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்
பதிவு : பிப்ரவரி 11, 2020, 01:28 AM
போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு முன்பு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2015 ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை பெற்று தருவதாக கூறி 2  கோடியே 80 லட்ச ரூபாய் பெற்று மோசடி  செய்ததாக  மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 


இந்த வழக்கில், செந்தில் பாலாஜியின் வீடு மற்றும்  அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார்.


இந்த மனு மீதான விசாரணையின்போது, விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் ஏதும் அனுப்பப்படவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். 


இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அளித்த நாளில், செந்தில் பாலாஜிக்கு  நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.


இந்நிலையில், நீதிபதி ஆதிகேசவலு முன் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அளித்த நாளில், முன் ஜாமீன் வழங்கியதால், உத்தரவில் திருத்தம் செய்யுமாறு முறையிட்டார்.

இதை ஏற்று, ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் அளித்த நோட்டீஸ் அடிப்படையில், வரும் 14ம் தேதி  விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்ட நீதிபதி, முன்ஜாமீன் உத்தரவில் திருத்த மனு தாக்கல் செய்ய காவல் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

692 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

226 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

169 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

67 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

33 views

பிற செய்திகள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வழக்கு: "தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

10 views

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

211 views

"பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்": தேவையான ஏற்பாடுகளை செய்ய முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அறிவுரை

பொதுத்தேர்வுகள் ஜுன் 15ஆம் தேதி முதல், திட்டமிட்ட தேதிகளில் கண்டிப்பாக நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

19 views

வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி - வனவிலங்குகள் தண்ணீர் அருந்த வனத்துறை நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்திலிருந்து, வன விலங்குகளைக் காக்க, வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் வனத்துறையினர் நீர் நிரப்பி வருகின்றனர்.

12 views

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - "வங்கி தவணை செலுத்தக் கூறி தகாத வார்த்தைகள் திட்டுவதாக புகார்"

ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

187 views

லாட்டரி சீட்டு விற்பனை-3 பேர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.