200 அரங்குகளை கொண்ட விவசாயக் கண்காட்சியில் முதல்வர் இயக்குவது போன்ற டிராக்டர் சிற்பம் வடிவமைப்பு
பதிவு : பிப்ரவரி 10, 2020, 07:56 AM
சேலம் மாவட்டம் தலைவாசலில் 200 அரங்குகளை கொண்ட விவசாய கண்காட்சி விவசாயிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது.
சர்வதேச தரத்திலான கால்நடை பூங்கா அமையும் சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோடு பகுதியில், 200 அரங்குகளுடன் விவசாய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலிக்குளம், ஆலம்பாடி, பர்கூர், காங்கேயம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த அரியவகை காளைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 

செவ்வாடு, மேச்சேரி, சென்னை சிவப்பு, சேலம் கருப்பு உள்ளிட்ட ஆட்டினங்கள், பல்வேறு கோழி இனங்கள், வான்கொழி, காடை, மீன், முயல் உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. பொங்கல் பண்டிகையின்போது தந்தி டி.வி-க்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த சிறப்பு நேர்காணலின்போது, டிராக்டர் இயக்கிய காட்சி, பழங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பூக்களால் உருவாக்கப்பட்ட மயில், காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கோபுரம், தானியங்களால் தயாரான தேர் உள்ளிட்டவை காண்போர் மனதை ஈர்த்துள்ளன. 

விவசாய தோட்டத்தில் உள்ள செடிகளை தீவனமாக அரைக்கும் இயந்திரம்,  பறக்கும் மருந்து தெளிப்பான், சொட்டுநீர் பாசனத்தின் மூலம் குறைந்த தண்ணீரில் விவசாயம் செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், விவசாயத்திற்கு பயன்படும் பல்வேறு டிராக்டர் வகைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. விவசாயத்தை மேம்பாடுத்த நடத்தப்படும் இக்கண்காட்சியை காண வரும் மக்கள், புதிய அனுபவத்தை பெறுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

380 views

மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

கொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

280 views

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

57 views

பிற செய்திகள்

"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

680 views

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

64 views

கொரோனா தொற்று குணமடைந்தாலும் கவனம் - எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

2525 views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

17 views

தமிழகத்தில் மேலும் 5,659 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 5 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

26 views

கொரோனா பாதித்தவர்களை உற்சாகப்படுத்தும் பாடகர் திருமூர்த்தி

சமூக வலைதளங்களில் அறிமுகமாகி திரைப்பட பின்னணி பாடகரான மாற்றுத்திறனாளி திருமூர்த்தி இப்போது கொரோனா முகாமிலும் தன் இசை பயணத்தை தொடர்வதை பற்றி விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு..

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.