"கையெழுத்து இயக்கம் மாபெரும் வெற்றி" - திமுக தலைவர் ஸ்டாலின்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 05:07 PM
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கு எதிராக தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தேர்தல் களமாக இருந்தாலும், கையெழுத்து இயக்கமாக இருந்தாலும், தமிழக மக்கள் தி.மு.க.விற்கு பேராதரவு அளித்து வருவதாக கூறியுள்ளார். இந்த ஆதரவை கண்டு, மத்திய-மாநில ஆட்சியாளர்கள் நடுங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தான், கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என, மாநில அமைச்சர் விமர்சனம் செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டணிக் கட்சித் தலைவர்களும், கட்சியினரும் உழைத்ததால் தான், கையெழுத்து இயக்கம், மக்கள் இயக்கமாக மாறி, புதிய வரலாற்றை படைத்துள்ளதாக கூறியுள்ளார். மக்களுக்கு எதிரான நாட்டை மத ரீதியாகத் துண்டாடும் சி.ஏ.ஏ உள்ளிட்டவற்றை எதிர்த்த திமுகவின் போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

282 views

பிற செய்திகள்

திருச்சி - தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மீது தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

7 views

வீடுகளுக்கே சென்று நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டம்: சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுதேடி சென்று அரசின் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

7 views

சுகாதார ஆய்வாளரை தாக்க முயன்ற பொதுமக்கள்- கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த‌தால் ஆத்திரம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்த கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த சுகாதார ஆய்வாளரை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

8 views

ஊரடங்கை மீறிய இளைஞர்கள் - மரத்தில் ஏறும் தண்டனை வழங்கிய போலீசார்

தூத்துக்குடியில் 144 தடையை மீறி தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

10 views

தனிமையில் இருப்பதையே கொண்டாட்டமாக மாற்றிய மக்கள் : கலகலப்பூட்டும் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக மாற்றி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற காட்சிகளின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

10 views

ஊரடங்கை மீறினால் - நடப்பது என்ன ?

ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே வந்தால் என்ன நேரிடும் என்பதை சித்தரித்து காட்டியுள்ள மதி கார்டூனை தற்போது பார்க்கலாம்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.