தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி
300 யூனிட் வரை மின்சாரம் இலவசம், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் களைகட்டி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்திற்குள் லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளது. வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 5ஆயிரம் ரூபாயும், முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 7ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என கூறியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் மீண்டும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லி போக்குவரத்து துறைக்கென 15,ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்கப்படும் எனவும், அனைத்து அங்கீகாரமற்ற காலனிகளும் முறைப்படுத்தப்பட்டு அவற்றின் மேம்பாட்டுக்காக 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என கூறியுள்ளது.
Next Story

