டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் : யார் டெல்லி கில்லி..?
பதிவு : ஜனவரி 21, 2020, 04:11 PM
டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் 90 கட்சிகள் போட்டி போடும் நிலையில், மக்கள் எந்த கட்சிக்கு மகுடம் சூட்டப் போகிறார்கள் என்பதே தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறகிறது. 

தலைநகரின் தேர்தல் களத்தில் 90-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் குதித்துள்ளன.

ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்தியில் ஆளும்  பா.ஜ.க., நாட்டை  நீண்டநாட்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே பிரதானமாக போ​ட்டி நிலவுகிறது. 

பா.ஜ.க.  காங்கிரஸ்,  பகுஜன் சமாஜ் கட்சி,  தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும் இந்த தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. 

டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மாநில  கட்சியாகத்தான் உள்ளது.

தேர்தல் ஆணையத்தில், பதிவு செய்யப்பட்ட 290 க்கும் மேலான கட்சிகள் உள்ள நிலையில்,  அவற்றில் 85 கட்சிகள் இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ராஷ்டிரிய ஜனதா தளமும், பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியாக உள்ள லோக் ஜனசக்தியும், தங்களுக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறியுள்ள சின்னத்தை இந்த தேர்தலுக்கு  ஒதுக்கித் தர  கோரிக்கை வைத்துள்ளன.

மும்முனை போ​ட்டி நிலவி வரும் நிலையில், 85 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் வாக்குகளை பிரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இது மாதிரியான கட்சிகளுக்கு வெறும் நான்கு  சதவீதம் வாக்குகள் தான் கிடைத்தன.

மக்களாட்சியில் மக்கள் தான் மன்னர்கள் என்பது அடிப்படை. அந்த வகையில், யாருக்கு மக்கள் முடிசூட்டப் போகிறார்கள் என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

363 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

91 views

பிற செய்திகள்

வேல்ரம்பேட் ஏரியை பாதுகாக்கக்கோரி போராட்டம் - 300க்கும் மேற்பட்டோர் ஏரியின் நடுவே உண்ணாவிரதம்

புதுச்சேரியில் உள்ள வேல்ரம்பேட் ஏரியை பாதுகாக்கக்கோரி 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12 views

கனமழையில் மிதக்கும் மும்பை- பல பகுதிகள் துண்டிப்பு

மும்பையில், தொடர் கனமழை காரணமாக பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

12 views

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - மிதிவண்டி பேரணியில் ஈடுபட்ட லாலுபிரசாத் யாவத் கட்சியினர்

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் லாலுபிரசாத் யாவத் கட்சியினர் மிதிவண்டி பேரணியில் ஈடுபட்டனர்.

27 views

பார்சலில் அனுப்பப்பட்ட தங்கம் - சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாட்டின் தூதரக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

67 views

1000 படுக்கைகளுடன் பிரமாண்ட மருத்துவமனை - உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்

டெல்லியில், ஆயிரம் படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தனர்.

40 views

"24 மணி நேரத்தில் மட்டும் 14,856 நோயாளிகள் குணமடைந்தனர்" - மத்திய சுகாதாரத்துறை தகவல்

தேசிய அளவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் சதவீதம், 60 புள்ளி 77 சதவீதமாக உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.