உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு
பதிவு : ஜனவரி 19, 2020, 05:59 PM
மாற்றம் : ஜனவரி 19, 2020, 06:00 PM
உணர்ச்சி வசப்பட்டு தொண்டரை தாக்கியதற்காக மனம் வருந்திய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, அந்த தொண்டரின் வீட்டிற்குச் சென்று வருத்தம் தெரிவித்துள்ள சம்பவம் அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
 குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி நடத்திய  ஆர்ப்பாட்டத்தில் , கட்சியின் தலைவர் அழகிரி பங்கேற்றார் . அப்போது  சலசலப்பை ஏற்படுத்தி மாணவரணி நிர்வாகி நரேசை , அழகிரி  தாக்கினார் . இந்த  காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது . 

இந்நிலையில் இன்று அரக்கோணத்தில் ராணிப்பேட்டை மாவட்ட  காங்கிரஸ் செயல்வீரர்களை கூட்டத்தில் அழகிரி கலந்து கொண்டார்..  கூட்டம் முடிவடைந்த உடன் தன்னால் தாக்கப்பட்ட   நரேசின் வீட்டிற்கு சென்றார் .. திடீரென்று  தமது வீட்டிற்கு வந்த கட்சித் தலைவரைப் பார்த்து நரேஷ் திக்கு முக்காடிப் போனார்.. நரேசுடன் அவர்ந்து சிறிது நேரம் பேசிய அழகிரி , அன்றைய நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு  அங்கிருந்து சென்றார் . அழகிரியின் இந்த செயலைப் பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

378 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

93 views

பிற செய்திகள்

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணை

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

233 views

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை தேவை - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்துவர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

79 views

"60 சதவீதம் பேர் தேவையற்ற வகையில் கைது" - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

தேவையற்ற வகையில் 60 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

70 views

பொறியாளர் மாற்றம் : சிபிஐ விசாரணைக்கு தயாரா? - மு.க.ஸ்டாலின்

எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி கூறிவரும், முதலமைச்சர் பழனிசாமி, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

548 views

"மின்கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை நடக்கிறது" - திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி

மின்சார கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை நடப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

287 views

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று

கோவை தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

662 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.