முதலீட்டு வழிகாட்டுதல் அனுமதி உயர் மட்ட குழு கூட்டம் : முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
பதிவு : ஜனவரி 13, 2020, 11:18 PM
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர் மட்ட குழு இரண்டாவது கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர் மட்ட குழு இரண்டாவது கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. 

கடந்த நவம்பர் மாதம் முதல் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 8 ஆயிரத்து 120 கோடி ரூபாய் முதலீட்டில் 16 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் 21 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில், 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இதன்மூலம் 6 ஆயிரத்து 608 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடுகள் முழுமையான செயல்பாட்டிற்கு வந்து, 6 ஆயிரத்து 763 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும் வாய்ப்பு உறுதியாகி உள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டம் தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, உள்ளிட்ட இடங்களில் செயல்படுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர்கள் எம்சி.சம்பத், கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிற செய்திகள்

"தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்" - தலைமை செயலாளர் சண்முகம்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

1885 views

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 871 பேருக்கு தொற்று உறுதியானது.

44 views

புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் - ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

இலங்கையின் 9வது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

11 views

பெண்களுக்கு சம உரிமை - தீர்ப்பு எதிரொலி - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்

மகள்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு உண்டு என்ற தீர்ப்பு குடும்ப நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

9 views

இடுக்கி நிலச்சரிவு - கேரள முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

இடுக்கி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்குமாறு, கேரள முதல்வர் பினராயி விஜயனை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

13 views

மத்திய அரசின் விருது பெறும் தமிழக காவலர்கள் - துணை முதல்வர் பாராட்டு

குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக, தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் துறை ஆய்வாளர்கள் மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.