"தனிப்பட்ட கருத்துக்களை கூற வேண்டாம்" - கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவுரை
பதிவு : ஜனவரி 13, 2020, 01:35 AM
அதிமுக கூட்டணி குறித்து தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிமுக கூட்டணி குறித்து தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணி மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் முடிவெடுப்பார்கள் என விவரிக்கப்பட்டுள்ளது. கொள்கை முடிவுகள் குறித்து தனி நபர்கள் தெரிவிக்கும் விமர்சனம், கட்சிக்கு ஊறு விளைவிக்கும் என்பதால், அத்தகையவர்களை கண்டிப்புடன் நெறிபடுத்த தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக அதில், அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.