முதலமைச்சரை சந்தித்து சிஏஏ,என்.ஆர்.சி.குறித்த கோரிக்கை மனுவை அளித்தனர் இஸ்லாமிய இயக்கங்கள்
பதிவு : ஜனவரி 11, 2020, 01:23 AM
சென்னையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தனர்.
 சென்னையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தனர். குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி., என்.பி.ஆர் ஆகியவை தொடர்பாக முதலமைச்சரிடம், அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். சிஏஏவை திரும்ப பெற வேண்டும், என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் முதலமைச்சரை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தமிழகத்தில் சிறுபான்மையினர் எந்தவித அச்சமும் பட தேவையில்லை என்று முதலமைச்சர் 100 சதவீதம் உறுதி அளித்ததாக குறிப்பிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.