சர்ச்சையாகும் பாதுகாப்பு வாபஸ் : பாதுகாப்பு வளையத்துக்குள் பிரமுகர்கள்
பதிவு : ஜனவரி 10, 2020, 04:22 PM
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வளையங்கள் குறித்து பார்க்கலாம்
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  வழங்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை பிரதமர் மட்டும் மிக உச்ச பாதுகாப்பான, எஸ்.பி. ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை வளையத்துக்குள் இருப்பார்.

அதற்கடுத்து இசட் பிளஸ், இசட், வொய் மற்றும் எக்ஸ் என்கிற வகைகளில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலிக்கு மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. 

இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது, இரண்டாவது மிக முக்கிய பாதுகாப்பாகும். முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது.

இசட் பிளஸ் பாதுகாப்பில், 18 முதல் 20 பேர் வரையிலான துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு வொய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 

இதில் 4 முதல் 6 துப்பாக்கி ஏந்திய  ரிசர்வ் படையினர் பொறுப்பில் இருப்பர்.

கடந்த ஆண்டு ஜூலை முதல் அரசியல்வாதிகள் உள்பட சுமார் 350  பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்ட  பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது

சுமார் ஆயிரத்து 300 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்

சமீபத்தில், சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்கான
எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையானது.

மத்திய அரசின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பவர்கள் தங்கள் பயணத் திட்டத்தை முன்கூட்டியே பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த பாதுகாப்பு படை,  உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு படி கட்டுப்படுத்தப்படுகிறது.

=================

தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

பிரதமர் மட்டும் மிக உச்ச பாதுகாப்பான எஸ்.பி.ஜி. வளையத்துக்குள் இருப்பார்

SPG, Z+, Z, Y, X ஆகிய வகைகளில் பாதுகாப்பு 

ஸ்டாலினுக்கு மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு

இரண்டாவது மிக முக்கிய பாதுகாப்பு பிரிவு, இசட் பிளஸ்

இசட் பிளஸ் பாதுகாப்பில்,18- 20 துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீசார் 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு Y பிரிவு பாதுகாப்பு

Y பிரிவில் 4 முதல் 6 துப்பாக்கி ஏந்திய  ரிசர்வ் படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள்

2019ல் 350  பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்ட  
பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது

சுமார் 1,300 ரிசர்வ் ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்

சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரின் 
SPG பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது

மத்திய அரசின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பவர்கள் 
பயண திட்டத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்

உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் செயல்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

476 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

63 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

57 views

பிற செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

30 views

ஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி

ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.

81 views

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

22 views

"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்

திருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

61 views

ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்

திருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.

37 views

65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்

கேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.