கூட்டுறவு சங்க முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை : பேரவையில் சட்டத்திருத்த மசோதா தாக்கல்
பதிவு : ஜனவரி 08, 2020, 06:35 PM
கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணை தலைவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை விதிக்க வழிவகுக்கும் சட்டதிருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு அறிமுகம் செய்தார். இந்த சட்ட மசோதாவிற்கு திமுக ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது. இந்த திருத்த சட்ட மசோதாவில், கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணை தலைவர் ஆகியோர் செய்யும் கையாடல், மோசடி மற்றும் தவறான  நடத்தைகளுக்கு கூட்டுறவு சங்க அலுவலர்கள் மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல தலைவர், துணை தலைவர் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை இல்லை. எனவே தலைவர் மற்றும் துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு சங்க தலைவரோ, அல்லது துணை தலைவரோ குற்றம் இழைத்ததற்கான சாட்சியம் இருக்கும் பட்சத்தில், அவர்களை ஆறு மாத காலத்துக்கு தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம், அதற்கான காரணத்தை எழுத்து வடிவில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாளை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கியுள்ளார்.

3139 views

பிற செய்திகள்

கொரோனா அச்சம் - ஆசிரியர்களுக்காக அனுப்பப்பட்ட அரசு பேருந்தில் ஏறுவதை தவிர்த்த ஆசிரியர்கள்

கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், சிதம்பரம், கடலூர் ஆகிய மூன்று பகுதிகளில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

41 views

கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதியில் 50 கி.மீ நடந்து சென்று தேடுதல் வேட்டை

கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

48 views

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எங்கெங்கு வேலைவாய்ப்பு?

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..?

62 views

ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

82 views

500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது மதுரை ஸ்மார்ட் சிட்டி பணி

மதுரை மாநகராட்சியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி, 500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது.

48 views

பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கு - ஜூன் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

கொரோனா நோய்த்தொற்று சூழலில் பணியாற்றும் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கை ஜூன் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.