கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் - முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்தார்

கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க. 12 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.
கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் - முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்தார்
x
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ காரணமான, 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து 15 தொகுதிகளில் கடந்த 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது 67 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. ஆட்சியை தக்க வைக்க 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில்  முதலமைச்சர் எடியூரப்பா தமது தலைமையிலான ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.இடைத்தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்