ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு அதிக நிதி - மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்

நாடு முழுவதும் இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான விடுதிகளை தரமாக பராமரிக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு அதிக நிதி - மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்
x
நாடு முழுவதும் இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான விடுதிகளை தரமாக பராமரிக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என  தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார். மக்களவையில் இன்று பேசிய கனிமொழி, தமிழகத்தில் மொத்தம் ஆயிரத்து 675 விடுதிகள் இருப்பதாகவும்,  அதில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம்  மாணவர்கள் தங்கி படித்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் அங்கு  போதிய கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இருப்பதில்லை எனவும், மாணவிகள் அதிகம் பாதிக்கப் படுவதாகவும் குறிப்பிட்டார். பள்ளி மாணவர் ஒருவருக்கு உணவுக்காக மாதம் 900 ரூபாய் மற்றும் கல்லூரி மாணவருக்கு உணவுக்காக ஆயிரம் ரூபாய்  மட்டுமே வழங்கப்படுவதாக குறிப்பிட்ட கனிமொழி,  இந்த குறைந்த தொகையில் ஊட்டச்சத்து மிக்க உணவை எப்படி உட்கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்