"சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கக் கூடாது" - மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை

சேலம் இரும்பாலையை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மாநில அரசு வாங்கிக் கொள்ளும் என்றும், தனியாருக்கு அதனை விற்கக் கூடாது எனவும் மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கக் கூடாது - மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை
x
சேலம் இரும்பாலையை  தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மாநில அரசு வாங்கிக் கொள்ளும் என்றும், தனியாருக்கு அதனை விற்கக் கூடாது எனவும் மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், ஒருவேளை மத்திய அரசுக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் நிலையில், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த ஓர் ஆண்டில், 100 சதவீதம் நிதியளித்து மத்திய அரசுக்கு உதவி செய்வோம் என்றும் அவர் கூறினார். அண்ணா மற்றும் கருணாநிதி முயற்சியால் இந்திராகாந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட சேலம் இரும்பாலை, தமிழகத்தின் தமிழ் உணர்ச்சி மற்றும் பெருமையோடு தொடர்புடையது என்றும், கடந்த 2010 ஆம் ஆண்டு, இந்த ஆலையை நவீனமயமாக்க ரூபாய் 2500 கோடி செலவிடப்பட்டதையும் டி.ஆர். பாலு அப்போது சுட்டிக்காட்டி உள்ளார். தற்போது வெள்ளித்தட்டில் வைத்து சேலம் இரும்பு ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க, பா.ஜ.க. அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.  

Next Story

மேலும் செய்திகள்