மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் - கோயம்பேட்டில் முதலமைச்சர் பழனிசாமி திறந்தார்
பதிவு : நவம்பர் 30, 2019, 12:14 AM
சென்னை கோயம்பேட்டில் 485 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த மூன்றாம் நிலை சுத்தகரிப்பு நிலையத்திற்கு மத்திய சென்னை பகுதிகளான அண்ணா நகர்,  தி.நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம் ஆகிய இடங்களில் இருந்து  கழிவு நீர், பெறப்படுகிறது. இந்த நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும்.  இந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் பெரிய தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை வரை 60 கிலோ மீட்டர் வரை ராட்சத பைப் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.  இதனை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்சாலையை நேரில் பார்வையிட்டார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுத்திகரிப்பு தண்ணீரை பருகினார். மேலும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1865 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

343 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

34 views

பிற செய்திகள்

சிதம்பரம் : விளைநிலங்களில் புகுந்த முதலையால் அச்சம்

சிதம்பரம் அருகே விளைநிலங்களில் முதலை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

5 views

குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாம் : பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். இதனையொட்டி நடைபெற்ற வீரர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

10 views

"பைனாப்பிள் கொடுத்தேன்.. பாப்பா பிறந்தது" - சத்சங்கம் நிகழ்வை கலகலப்பாக்கிய நித்தி

புளியோதரை, பொங்கல், உண்டை கட்டி என ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசி வந்த நித்தி, தன் அருமை பெருமைகளில் ஒன்றான பைனாப்பிள் பிரசாதம் பற்றி பேசி கலகலப்பூட்டி இருக்கிறார்.

604 views

உள்ளாட்சி தேர்தல் - புதிய தேதி அறிவிப்பு

வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

30 views

காவலன் மொபைல் ஆப் குறித்து விழிப்புணர்வு

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

50 views

வெங்காயத்தை தொடர்ந்து அப்பளம் விலை உயர்வு

வெங்காய விலை உயர்வை தொடர்ந்து, தற்போது, அப்பளம் விலையும் உயர்ந்துள்ளதாக திருச்சி அப்பள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.