ராதாபுரம் சட்டப்பேரவை தேர்தல் விவகாரம் - டிசம்பர் 11 ஆம் தேதி இறுதி விசாரணை
பதிவு : நவம்பர் 29, 2019, 04:02 PM
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
அதிமுக எம்எல்ஏ இன்பதுரை 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை  தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கடைசி 3 சுற்று வாக்குகளையும்  தபால் வாக்குகளையும் மட்டும் எண்ண உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வாக்குகள் எண்ணப்பட்டட நிலையில் அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வருகின்ற 11 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்ததோடு டிசம்பர் 11 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், அப்பாவு மற்றும் இன்பதுரை தரப்பு கூடுதல்  ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளளது.

பிற செய்திகள்

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்தல் : மெட்ரோ ரயில் நிலையத்தில் வைத்து 350 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னைக்கு இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 12 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

30 views

மதுரையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 180 க்கு விற்பனை

வெங்காயம் வரத்து குறைந்ததால், நாடு முழுவதும் வெங்காயம் விலை, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

15 views

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது : கரையோர மக்களுக்கு 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 27 - வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

13 views

இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

48 views

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் : இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.

31 views

ரூ.60-க்கு வெங்காயத்தை விற்ற இளைஞர்கள் : கும்பகோணத்தில் கூடிய கூட்டத்தால் பரபரப்பு

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு நாடாளுமன்றத்தையே, உலுக்கிய நிலையில், கும்பகோணத்தில் ஒருவர் வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.