"எதிர்க்கட்சிகைளை வசைபாடும் போது கண்ணியம் தேவை" : ஜெகன்மோகன் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு அட்வைஸ்

விஜயவாடா பகுதியில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகைளை வசைபாடும் போது கண்ணியம் தேவை : ஜெகன்மோகன் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு அட்வைஸ்
x
விஜயவாடா பகுதியில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மணல் தட்டுப்பாட்டை நீக்க ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்காமல், எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டி வருவதாக தெரிவித்தார். மணல் தட்டுப்பாட்டை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்த சந்திரபாபு நாயுடு, மணல் கேட்டு போராடுபவர்களை ஆளும் கட்சியினர் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக குற்றம்சாட்டினார். நாங்களும் விமர்சனம் செய்துள்ளோம், ஆனால் அந்த விமர்சனத்தில் கண்ணியத்தை கடைபிடித்துள்ளோம் என்று நாயுடு தெரிவித்துள்ளார்.  எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை விட்டு, அந்த நேரத்தை மணல் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசை சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்