மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி : உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதில் ஆளுநரை குற்றஞ்சாட்டுவது தவறு என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி : உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்
x
மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதில் ஆளுநரை குற்றஞ்சாட்டுவது தவறு என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமித்ஷா, இதற்கு முன் எந்தவொரு மாநிலத்திலும் ஆட்சியமைப்பதற்கு 18 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதில்லை எனவும் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிந்ததால், ஆட்சியமைக்க வருமாறு ஒவ்வொரு கட்சிக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்ததாகவும் ஆனால், யாரும் முன்வரவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பை ஆளுநர் மறுக்கவில்லை எனவும் ஆட்சியமைப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால், எந்த கட்சியாக இருந்தாலும் இன்று கூட ஆளுநரை அணுகலாம் எனவும் அமித் ஷா தெரிவித்துள்ளா​ர்​.சிவசேனா பற்றி குறிப்பிட்ட அமித்ஷா, தேர்தல் பிரசாரத்தின்போது, தானும் பிரதமர் மோடியும் பாஜக கூட்டணி வென்றால் பட்னாவிஸ் முதல்வராவார் என்று கூறியபோது சிவசேனா ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்