மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைப்பு- மோடி பிரசாரம்

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்
மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைப்பு- மோடி பிரசாரம்
x
மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பார்லி நகரில் பிரசாரம் மேற்கொண்ட அவர் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று குறிப்பிட்டார். காஷ்மீர் குறித்த மத்திய அரசின் முடிவால் நாடு அழிந்துவிடும் என்ற காங்கிரஸ் கட்சியின் பொய்க்கூற்று என்னவாயிற்று என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அனைத்து வெற்றி சாதனைகளையும் பாஜக முறியடிக்கும் என்றும்  பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்