"மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது" - மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
பதிவு : அக்டோபர் 10, 2019, 12:57 PM
மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கஜேந்திர சிங் செகாவத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். கர்நாடக அரசின் நடவடிக்கை காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று அதில், சுட்டிக்காட்டி உள்ளார். கடைமடை பகுதிகளுக்கு மாத வாரியாக தண்ணீர் வழங்க தற்போது காவிரி படுகையில் உள்ள அணைகள் போதுமானது என காவிரி நதிநீர் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ள நிலையில், புதிய அணை கட்டவேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கர்நாடகாவின் புதிய அணை கட்டும் திட்டத்தை எதிர்த்தும், நீதிமன்ற அவமதிப்பு குறித்தும் தமிழக அரசு தொடர்ந்துள்ள எண்ணற்ற வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். நீர்மின் திட்டம் மற்றும் நதி பள்ளத்தாக்கு தொடர்பான நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழு ஏற்கனவே, மேகதாது திட்டத்தை நிராகரித்த நிலையில், தற்போது கர்நாடகா மீண்டும் அந்த அமைப்பை அணுகி உள்ளது தெரிய வந்துள்ளதாக முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

கர்நாடக அரசின் திட்டத்தை ஏற்காமல் தவிர்ப்பதுடன், விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என நீர்மின் திட்டம் மற்றும் நதி பள்ளத்தாக்கு தொடர்பான நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழுவுக்கு அறிவுறுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

பிற செய்திகள்

புதிதாக வாங்கப்பட்ட எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு : கன்னியாகுமரி வந்தடைந்தது - அதிகாரிகள் நேரில் ஆய்வு

பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு கன்னியாகுமரி வந்தடைந்தது.

239 views

ஒரே நாளில் கொரோனா பிரிவில் 5 பேர் மரணம்

சென்னையில், ஒரே நாளில், கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர்.

326 views

உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

176 views

தலைமைப் பொறியாளருக்கு எதிரான வழக்கு - சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

திருச்சி மாவட்ட மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் வளர்மதிக்கு எதிரான ஊழல் புகார் வழக்கில், சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

24 views

சிறையையும் விட்டு வைக்காத கொரோனா - புழல் சிறையில் மேலும் 16 பேருக்கு தொற்று

சென்னை புழல் சிறையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

26 views

ஸ்டான்லி மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.