"காங்கிரஸ் தள்ளாடுகிறது" - சல்மான் குர்ஷித் வேதனை

கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியதால், காங்கிரஸ் தள்ளாடுவதாக மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வேதனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தள்ளாடுகிறது - சல்மான் குர்ஷித் வேதனை
x
கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியதால், காங்கிரஸ் தள்ளாடுவதாக மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வேதனை தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைகளுக்கு, வரும், 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான, சல்மான் குர்ஷித், மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து அனைவரும் இணைந்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியதால், கட்சி தற்போது தள்ளாடுவதாகவும், கட்சித் தலைவராக சோனியா பொறுப்பேற்றாலும், இடைக்கால ஏற்பாடு என்ற மனஓட்டத்திலேயே அவர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், சட்டசபை தேர்தல் நடக்கும், மஹாராஷ்டிரா, ஹரியானாவில், கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில், இந்த மாநிலங்களில் வெற்றி மற்றும் கட்சியின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்