பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி. பெங்காலி பாரம்பரிய புடவையை பரிசளித்த மம்தா. விமான நிலையத்தில் நிகழ்ந்த எதிர்பாராத சந்திப்பு
பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி
x

பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென்னை நேற்று எதிர்பாராத விதமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக புதுடெல்லி  புறப்பட்ட மம்தா பானர்ஜி கொல்கத்தா விமான நிலையத்தில் யசோதா பென்னை சந்தித்துள்ளார். யசோதா பென் இரண்டு நாள் நிகழ்வாக ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்று விட்டு கொல்கத்தா விமான நிலையம் வந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.  இருவரும் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டதாகவும் யசோதாவுக்கு பெங்காலி பாரம்பரிய புடவையை   மம்தா பானர்ஜி பரிசளித்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்