"நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
x
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்தார். அப்போது பேசிய அவர், நாட்டின், பணவீக்க விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு, 6 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் கடந்த ஆண்டு மூன்று புள்ளி ஐந்து சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது என்றார். 
சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில் உணவு மற்றும் எரிபொருள் தவிர்த்த மொத்த பணவீக்க விகிதம் 4.8 சதவீதமாக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 3.1 சதவீதமாக குறைந்துள்ளது என்றார். குறைந்த அளவு வரி செலுத்துவோரின் சிறு சிறு நடைமுறைத் தவறுகளுக்காக வழக்கு தொடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டு வணிகம் செய்வதற்கு எளிய நாடுகளுக்கான உலக வங்கி தரவரிசைப் பட்டியலில் 142 ஆவது இடத்திலிருந்த இந்தியா 2018-ல் 77 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். வருடாந்தர மெகா ஷாப்பிங் விழாக்கள், 2020 மார்ச் மாதத்தில் 4 இடங்களில் நடத்தப்படும் என்றும், கைவினைப்பொருட்கள் , யோகா, சுற்றுலா, ஜவுளி, தோல் பொருட்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  
45 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடுகள் வாங்குவதற்கு 2020 மார்ச் 31 வரை பெறப்பட்டுள்ள கடனுக்கான வட்டி வீதத்தில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியில் கூடுதல் தள்ளுபடி அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்டுவதற்கு பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் இரண்டாம் கட்டமாக, கழிப்பறை, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட 1.95 கோடி வீடுகள் பயனாளிகளுக்கு கிடைக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்