பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது : கட்சியினருக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்
பதிவு : செப்டம்பர் 13, 2019, 03:38 PM
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவுறுத்தி உள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவுறுத்தி உள்ளனர். இளம்பெண் சுபஸ்ரீ இறப்பை தொடர்ந்து, அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அறியாமையால் சிலர் செய்யும் செயலால், மக்கள் பாதிக்கப்படுவதால் மனவேதனை அடைகிறோம் என்று கூறியுள்ளனர். தலைமையின் அறிவுறுத்தலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், கட்சி நிகழ்ச்சி,  திருமண விழா, வரவேற்பு என்கிற பெயரில் மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3385 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

305 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

300 views

பிற செய்திகள்

தேனி : மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து

தேனி மாவட்டம் போடி மெட்டு சாலையில் ஏற்பட்ட வேன் கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

3 views

திருமணத்தை மறைத்ததால் நிகழ்ந்த அடிதடி : மனைவியை பார்க்க வந்த கணவருக்கு அடிஉதை

இளம்பெண் திருமணத்தை மறைத்ததால், கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து அவரது கணவரை அடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

5 views

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர் நீதிமன்றத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

125 views

தர்மபுரி: சைக்கிளில் சென்ற சிறுவனை மடக்கி பிடித்த போலீஸ் எஸ்.ஐ.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூரில் காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

9 views

இந்தி மொழி விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன? : முதலமைச்சர் விளக்கம் அளிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

கன்னட மொழியே தங்களது மாநிலத்தின் பிரதான மொழி என கர்நாடக முதல்வர் டிவிட்டர் மூலம் பதிவிட்டுள்ள நிலையில், இந்தி மொழி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறத்தைகள் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.

6 views

"தமிழகத்திற்கு மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு?" : வதந்தியை நம்பி கொதித்தெழுந்த கன்னட அமைப்பினர்

மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான வதந்தி கர்நாடகாவில் புயலை கிளப்பியிருக்கிறது.

2861 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.