தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க வாருங்கள் : தொழிலதிபர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 10:07 AM
மாற்றம் : செப்டம்பர் 04, 2019, 03:32 PM
தமிழகத்தில் தொடங்க வருமாறு நியூயார்க் தொழிலதிபர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் கேட்டர்பில்லர், ஃபோர்டு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், "தொழில் முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழ்நாடு" என்ற காட்சி தொகுப்பு திரையிடப்பட்டது. பின்னர், முதலீட்டாளர்கள் இடையே பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தொழில் முதலீட்டிற்கு உகந்த சூழல் உள்ளதாகவும், தமிழகத்திற்கு வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து தேவைகளையும் அரசு நிறைவேற்றி தரும் என்றும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க 16 நிறுவனங்கள்,  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3586 views

பிற செய்திகள்

தமிழக மீனவர்கள் விடுதலை - நவாஸ் கனி எம்.பிக்கு மீனவர்கள் நன்றி

மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

6 views

சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.

213 views

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

182 views

மாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு

கும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

7 views

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

9 views

திமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி வழிப்பறி : 4 இளைஞர்கள் கைது

ஊர்மக்களை அச்சுறுத்தி வந்த கும்பல் சிக்கியது

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.