தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் யார்...? கே.டி.ராகவனுக்கு அதிக வாய்ப்பு என தகவல்
பதிவு : செப்டம்பர் 02, 2019, 02:57 PM
தமிழக பாஜக புதிய தலைவராக ராகவன் தேர்ந்தெடுப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அக்கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் விலகினார். இதையடுத்து தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக புதிய தலைவராக ராகவன் தேர்ந்தெடுப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பதவிக்கு வானதி சீனிவாசன்,  நயினார் நாகேந்திரன் ஆகியோரின்  பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும் ராகவனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழக பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளராக வானதி சீனிவாசனும், தமிழக பாஜக துணைத் தலைவராக  நயினார் நாகேந்திரனும் உள்ளனர். பாஜக  மாநில செயலாளர் பொறுப்பில் ராகவன் இருந்து வருகிறார். மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி, கோவை (தெற்கு) தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வானதி சீனிவாசன், அகில பாரதிய வித்யார்தி பரிஷத் என்ற அமைப்பில் பணியாற்றி உள்ளார். ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சராக இருந்துள்ளார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி கடந்த 2017ல் அமித்ஷா முன்னிலையில் நயினார் நாகேந்திரன்  பாஜகவில் இணைந்தார்.

வழக்கறிஞரான ராகவன் ஆரம்ப காலம் முதலே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணியாற்றியவர் ஆவார். அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பிலும் இருந்துள்ள ராகவன், காஞ்சிபுரம் மக்களவை தொகுதி மற்றும் 2014-ல், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.தற்போதைய நிலையில் தமிழக பாஜக புதிய தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட ராகவனுக்கே அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தலைவர் குறித்து பா.ஜ.க. மேலிடம் ஓரிரு நாளில் அறிவிக்கும் என கூறப்படுகிறது.

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

10 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

9 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

27 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.