"இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும்" - ஒ.பன்னீர்செல்வம்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 01:51 PM
நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் மணிமண்டபத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் மணிமண்டபத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 304 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அங்கு சென்ற ஒ. பன்னீர்செல்வம், பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செய்தார். அவருடன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஒ.எஸ்.மணியன், பாஸ்கரன், செல்லூர் ராஜூ, வி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வதந்தி பரப்பி வருவதாகவும், கீழ்தரமான அரசியலை எதிர்க்கட்சிகள் செய்துவருவதாக தெரிவித்த ஒ.பன்னீர்செல்வம் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் என்றார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.