காரைக்கால் புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 12:06 AM
காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் புறவழிச்சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் புறவழிச்சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். இது தொடர்பான கோப்பு பொதுப்பணித்துறை சார்பில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியில்  இந்திரா காந்தி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை வரையிலான கடலூர்-சென்னை சாலைக்கு கருணாநிதி பெயர் வைக்கவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.