ஜி.டி.பி. விகிதம் படுபாதாளத்தில் விழுந்தது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 12:28 AM
G.D.P. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் படுபாதாளத்தில் விழுந்துள்ளதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
G.D.P. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் படுபாதாளத்தில் விழுந்துள்ளதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அலங்காரப் பேச்சுகளைப் பேசி மார்தட்டிக் கொள்வதை விடுத்து, இப்போதாவது பாஜக அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.  உண்மையான பிரச்சினைகளான வேலை இழப்புகள், தொழிற்துறை சரிவு, கிராமப்புற துயரங்கள் - போன்றவை குறித்து மத்திய அரசு பேசி தீர்வு காண வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

1 views

மனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

2 views

புதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்

நாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

5 views

ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

4 views

நிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

14 views

"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.