தென் மாவட்ட ஜவுளி பதனிடும் புதிய தொழில் பூங்காவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கல் நாட்டி உள்ளார்.
தென் மாவட்ட ஜவுளி பதனிடும் புதிய தொழில் பூங்காவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கல் நாட்டி உள்ளார். சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த புதிய தொழில் பூங்கா, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் தாமரைக்குளம் - பொட்டல் குளம் கிராமங்களுக்கு இடையே, 102 ஏக்கரில் அமையும் என தெரிவித்தார். இந்த புதிய ஜவுளி பூங்காவின் மூலம் சுமார் 2 ஆயிரம் பேர் நேரடியாகவும், 2 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவர். சுமார் 2ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடைபெறவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு, தமது செய்திக்குறிப்பில் விளக்கம் அளித்துள்ளது.