சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு : நாளை ஒத்திவைப்பு

சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையும், அமலாக்கத்துறை வழக்கு விசாரணையும் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு : நாளை ஒத்திவைப்பு
x
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு மற்றும் சிபிஐ காவலுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது. அப்போது சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட எழுத்துப்படிகளை பாதுகாக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிவிக்காமல் ஆவணங்களை வழக்கு குறிப்பேட்டில் சேர்த்ததை ஏற்க முடியாது என்றும் கபில் சிபில் வாதங்களை முன்வைத்தார். ஐஎன்எக்ஸ் வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2009 ஆண்டுக்கு பிறகு குற்றமாக அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால், இந்த வழக்கில் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் 2007-2008 ஆண்டு காலக்கட்டத்தில்  நடைபெற்றவை என்றும் அபிஷேக் மனு சிங்வி வாதங்களை முன்வைத்தார். சட்டத்தில் குற்றமென அறிவிக்கப்படாத செயல்களைக் காட்டி ஒரு நபரை குற்றவாளி என முத்திரை குத்த முயற்சி செய்யப்படுகிறது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலிருந்து சிதம்பரம் தப்பித்து விடுவார் என்ற தவறான கண்ணோட்டத்தின் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் சிதம்பரத்திடம் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் ஏற்கெனவே திரும்ப திரும்ப கேட்கப்பட்டது தான் என்றும் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். போலீஸ் காவல் என்பது இங்கு ஒருவரை தாழ்மையடைய செய்வதாக உள்ளது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மற்றும் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையும் நாளை ஒத்திவைக்கப்பட்டது.அதுவரை அமலாக்கத்துறை வழக்கில் நாளை வரை சிதம்பரத்தை கைது செய்யவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்