நீட் மசோதா: மீண்டும் அனுப்ப கோரிக்கை - ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் மசோதா: மீண்டும் அனுப்ப கோரிக்கை - ஸ்டாலின்
x
நீட்  மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை முதலமைச்சர் பாழ்படுத்தி விட்டதாக அறிக்கையொன்றில் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் தேர்வு தொடர்பான மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திரும்பி  வந்து விட்டன என்ற உண்மையையும், அந்த மசோதாக்களை திரும்ப பெற்றுக்கொண்டு,  மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அனுப்பி வைத்ததையும் அவைக்கு தெரியாமல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறைத்து விட்டதாகவும்
தமது அறிக்கையில் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். 

கடிதம் எழுதுகிறோம் என்ற நாடகத்தை இனியும் தொடராமல், ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி உடனடியாக சட்டப்பேரவையின் சிறப்பு  கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில்  நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக  எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோரை அழைத்து சென்று  பிரதமரை சந்தித்து நேரில் வலியுறுத்த வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்