காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 01:35 AM
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் செயற் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பெரும் விவாதத்துடன் நடைபெற்ற கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், தலைவர் பொறுப்பில் ராகுல் காந்தி தொடர வேண்டும் என்று செயற்குழு வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஆனால், ராகுல் காந்தி அதனை மறுத்துவிட்டதால் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக செயற்குழு கூட்டம் தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தார். புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் பணி முடியும் வரை சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக தொடருவார் என்றும் வேணுகோபால் குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவராக சிறப்பாக செயல்பட்ட ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வேணுகோபால் தெரிவித்தார். 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.