மணிகண்டன், இன்று காலை சென்னை வர வாய்ப்பு

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ., மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
மணிகண்டன், இன்று காலை சென்னை வர வாய்ப்பு
x
 அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக  ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ., மணிகண்டன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பேட்டியில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ராமநாதபுரம், பரமக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, நள்ளிரவில், மதுரை கே.கே.நகரில் உள்ள தனது இல்லத்திற்கு மணிகண்டன் திரும்பினார். இன்று காலை கார் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ, அவர் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்