"கருணாநிதி மக்களின் நினைவில் நிலைத்திருப்பார்" - மம்தா பானர்ஜி புகழாரம்
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 12:21 AM
தமிழக மக்களின் நினைவில் எப்போதும் கருணாநிதி நிலைத்திருப்பார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில்ர, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழில் 'வணக்கம்' கூறி  விழாவில் பேசிய மம்தா பானர்ஜி , கருணாநிதியை யாராலும் எப்போதும் மறக்க முடியாது என்று கூறினார். காஷ்மீரில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றும், மாநில மக்களின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் பேசினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.