முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவு - பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த்,அமித்ஷா,ராகுல்காந்தி இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவு - பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த்,அமித்ஷா,ராகுல்காந்தி இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவு - பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த்,அமித்ஷா,ராகுல்காந்தி இரங்கல்
x
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவரை நாடு இழந்து விட்டதாக கூறியுள்ளார். கோடிக்கணக்கான மக்களின் உந்து சக்தியாக திகழ்ந்தவர், சுஷ்மா ஸ்வராஜ் என்றும், இந்திய அரசியல் வரலாற்றில் ஒளிவீசியவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிகச்சிறந்த அரசியல் தலைவரை நாடு இழந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

 முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவு - குடியரசு தலைவர், அமித் ஷா, ராகுல் காந்தி இரங்கல்


சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பொது வாழ்க்கையில் கண்ணியம் மிக்க தலைவரை நாடு இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

சுஷ்மா சுவ்ராஜ் மறைவுக்கு வெங்கய்யா நாயுடு இரங்கல் 

குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சுஷ்மாவின் மறைவு நாட்டுக்கும், தனக்கும் தனிப்பட்ட இழப்பு என தெரிவித்துள்ளார். சுஷ்மா சிறந்த நிர்வாகி, சிறந்த பேச்சாளர் என்றும் அவர் கூறியுள்ளார். 

சுஷ்மா சுவ்ராஜ் மறைவுக்கு பாஜக தலைவர் அமித் ஷா இரங்கல் 

பாஜக தலைவர் அமித் ஷா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சுஷ்மா மறைவு இந்திய அரசியல் மற்றும் பாஜகவுக்கு  மிகப்பெரிய இழப்பு என தெரிவித்துள்ளார்.

சுஷ்மா சுவ்ராஜ் மறைவுக்கு  ராகுல் காந்தி இரங்கல் 

சுஷ்மா ஸ்வராஜ் மிகச்சிறந்த நாடாளுமன்ற வாதி என கூறியுள்ள ராகுல் காந்தி, கட்சி எல்லைகளை கடந்து அவர் பழகக்கூடியவர் என தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். இதுபோல, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும் சுஷ்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்