பிரதமருடன் வைகோ சந்திப்பு
பதிவு : ஆகஸ்ட் 06, 2019, 02:49 AM
நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டம், அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும் என பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை வைகோ சந்தித்து பேசினார்.  அப்போது, பொன்னாடை போர்த்தி பிரதமருக்கு மரியாதை செய்த வைகோ, ஜி.பு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். இதை தொடர்ந்து, தமிழக பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் வைகோ கொடுத்தார். அதில், நியூட்ரினோ , ஹைட்ரோ கார்பன் திட்டம், அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இவை தவிர, கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டக்கூடாது, காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தமட்டில் இந்திய அரசியல் சட்டம் 370, 35ஏ பிரிவுகளை மத்திய அரசு திருத்தினால் அதன் விளைவுகள் விபரீதம் ஆகிவிடும் என்பன உள்ளிட்டவைகள் அந்த கோரிக்கைகளில் அடங்கும். மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, ஆயத்த மற்றும் பின்னல் ஆடைகள் தொழில் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது யார் என்று ஆளுநரும், தமிழக அரசும் பதில் சொல்ல வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

134 views

தி.மு.க கூட்டணியில் யார் யார்?

தி.மு.க கூட்டணியில் யார் யார்?

477 views

பிற செய்திகள்

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

2260 views

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.

600 views

2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடி, பூடான் சென்றுள்ளார்.

100 views

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.

198 views

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு : தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்தன

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோயில் இருந்ததற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

23 views

காரில் குற்றப்புலனாய்வு இயக்குனர் பெயரில் ஸ்டிக்கர் : சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து விசாரணை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.