"அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன ?" - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்
அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன ? - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை
x
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, அமெரிக்க அதிபர் கூறுவது உண்மையானால், பிரதமர் மோடி இந்திய மக்களை ஏமாற்றி விட்டதாகவும், இது 1972 சிம்லா ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் கூறியுள்ளார். பலவீனமான வெளியுறவுத்துறை இதனை இல்லை என எதிர்க்கும் அதே வேளையில், பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்