இன்று பதவி விலகுகிறார் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி..?

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து குமாரசாமி இன்று மாலை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று பதவி விலகுகிறார் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி..?
x
கர்நாடக அரசியலில் ஏற்பட்ட உச்சகட்ட குழப்பத்தை அடுத்து, இன்று மாலைக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த, சபாநாயகர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் ஒரு நாள் அவகாசம் வழங்குமாறு குமாரசாமி விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர், தமது முடிவில் உறுதியாக உள்ளார். எனவே, சட்டப்பேரவையில் இன்று மாலை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலை, குமாரசாமிக்கு உருவாகி உள்ளது. இந்த பரபரப்பான சூழலில், இன்று இரவு 7 மணிக்கு குமாரசாமி ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அப்போது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் பெங்களூருவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்