சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...
பதிவு : ஜூலை 22, 2019, 02:11 PM
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது. சூர்யாவின் கருத்துக்கு ஏற்கனவே கமல்ஹாசன், சீமான் ஆதரவு கரம் நீட்டிய  நிலையில், தற்போது ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். அண்மையில் அகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் புறக்கணிக்கப்படுவார்கள் என தனது வேதனையை வெளிப்படுத்தினார். 

புதிய கல்விக் கொள்கை பற்றி அரைகுறையாக அறிந்து, சூர்யா பேசுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கடுமையாக விமர்சனம் செய்தார். பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை, அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும் சூர்யாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்த விவகாரம் சூடுபிடித்தது. இதையடுத்து, கமல்ஹாசன், சீமான், அன்புமணி ராமதாஸ், தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஏழை மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வரும் நிலையில், கல்வி குறித்து பேச சூர்யாவுக்கு முழு உரிமை உள்ளது என அறிக்கை மூலம் ஆதரித்தார், கமல்ஹாசன். 

அதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய கமல்ஹாசன், அனைவருக்கும் கல்வி என்ற காமராஜர் கனவை கலைத்துவிட கூடாது, ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை உருவாக்கிவிட கூடாது என வலியுறுத்தினார். கிராமத்து மாணவனை ஒதுக்கும் முயற்சியே புதிய கல்விக் கொள்கை என கூறிய, தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதரவு ஒருபுறம், எதிர்ப்பு மறுபுறம் இருக்க, புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து தமக்கு தெரியாது என கருத்து சொல்லாமல் சில திரைத்துறை பிரபலங்கள் நழுவினர்.

சமமான கல்வி இல்லாதபோது ஒரே தேர்வு முறை ஏற்புடையது இல்லை என கூறிய சீமான்,  சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். சமகாலத்தில் என்ன நடக்கிறது என தெரியாமல் திரையில் கருத்து சொல்வது ஏமாற்றுவேலை என்று இயக்குநர் சங்கரை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த சூழலில், சென்னையில் நடைபெற்ற காப்பான் பட பாடல் வெளியீட்டு விழாவிலும் புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் ஒலித்தது. 

திரைத்துறையில் வேலை செய்வதற்கு சம்பளம் வாங்குகிறோம் என்பதோடு இருக்காமல் தனக்கு சமூக அக்கறை உண்டு என சூர்யா செயல்பட்டதாக கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார். அதற்கு அதே விழாவில் பதிலளித்து பேசிய ரஜினிகாந்த், சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் வெளிப்பட்டதாக பாராட்டியதோடு, அவரின் கருத்தை ஆமோதிப்பதாக குறிப்பிட்டார். தாம் பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என சொன்னார்கள், சூர்யா பேசியது மோடிக்கு கேட்டுள்ளது என்றும் மாணவர்கள் படும் கஷ்டங்களை கண்எதிரே பார்த்து, அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருபவர் சூர்யா என்றும் பாராட்டினார். நதிநீர் இணைப்பு உட்பட மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ரஜினிகாந்த், புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் என்ன சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் சூர்யாவின் கருத்தை ஆதரித்து ரஜினிகாந்த் பேசியிருப்பது, அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தர்பார் படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்"

ஏ. ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது.

1282 views

ரசிகர்களை கவர்ந்த 2.0 வில்லன் அக்க்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோ

பிரபல பாலிவுட் நடிகரும் 2.0 திரைப்படத்தின் வில்லனுமான அக் ஷய் குமார், தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

790 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

686 views

சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.

981 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

233 views

பிற செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடல்நிலை பரிசோதனைக்காக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,

697 views

நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

50 views

"தமிழகத்தின் எதிர்காலத்தை அதிமுகவால் தான் காப்பாற்ற முடியும்" - ஓ. பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் பிற கட்சிகளை சேர்ந்தவர் அதிகளவில் இணைவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

27 views

பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

26 views

"பால் விலை உயர்வு - மக்களிடையே எந்த கொந்தளிப்பும் இல்லை" - ராஜேந்திர பாலாஜி

பால் விலை உயர்வு மக்களிடம் எந்த கொந்தளிப்பையும் ஏற்படுத்த வில்லை என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.