கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம் : இன்று நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு?

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் எம்எல்ஏக்கள் தனித்தனியே கூடி ஆலோசனை மெற்கொண்டனர்.
கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம் : இன்று நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு?
x
கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால், தற்போதைய சூழல் குறித்து, மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார். குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி முற்றியுள்ளது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, ஆளுநர் கெடு விதித்தபோதிலும், திங்கட்கிழமைக்கு, பேரவையை ஒத்திவைத்து, சபாநாயகர் உத்தரவிட்டார். எனவே, இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நேற்று மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தினேஷ் குண்டுராவ், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதேவேளையில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் சார்பிலும் எம்எல்ஏக்கள் கூட்டம் தனித்தனியே நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்