தபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி
பதிவு : ஜூலை 16, 2019, 05:05 PM
தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தபால்துறை தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. கடந்த காலத்தில் தமிழ் மொழியில் நடத்தப்பட்ட இந்த தேர்வு, இந்த முறை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டதால், தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என, தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில், தமிழக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவை கூடியதும், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எழுந்து இந்த தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அவருக்கும், பிரதமர் மோடிக்கும் தமிழக எம்.பிக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2366 views

பிற செய்திகள்

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

46 views

டெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

775 views

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

62 views

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே மருத்துவ பரிசோதனை

டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

91 views

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரவிந்திரநாத்

தேனி பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் குமார் நன்றி தெரிவித்தார்

35 views

ப.சிதம்பரம் கைது கண்டனத்துக்கு உரியது - திருமாவளவன்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.