110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியீடு : ஆளும்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம்
பதிவு : ஜூலை 11, 2019, 05:04 PM
பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு குறித்த எதிர்க்கட்சி, ஆளும்கட்சி உறுப்பினர்களின் விவாதத்தால், சலசலப்பு ஏற்பட்டது.
பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு குறித்த எதிர்க்கட்சி, ஆளும்கட்சி உறுப்பினர்களின் விவாதத்தால், சலசலப்பு ஏற்பட்டது. 

குடிநீர், உள்ளாட்சி உள்ளிட்ட பலதுறைகள் சார்ந்த அறிவிப்புகளை 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். வேகமாக எழுந்து நின்ற திமுக உறுப்பினர் ஆஸ்டின், முதலமைச்சர் அறிக்கை தொடர்பாக சில கருத்துக்களை கூறினார். இதனை அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கியதை தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய சபாநாயகர், 110 ன் கீழ் வெளியான அறிவிப்புகள் மீது விவாதம் கூடாது என தெரிவித்தார். அவையின் செயல்பாடுகள் திசை மாறிச்செல்லும்போது, ஒரு உறுப்பினர், அதை சுட்டிக்காட்ட உரிமை இருப்பதாக துரைமுருகன் கூறினார். மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், தனது உரிமையின் மீதோ, அவை விதி 110ன் கீழ் வெளியிட்ட பொருள் மீதோ விவாதிப்பதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த விவாதத்தால் சிறிது  நேரம் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது

"சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு" - அமைச்சர் காமராஜ் 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் பணியாற்றி வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார். செய்யாறு உறுப்பினர் தூசி மோகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாளை முதல் இந்த சம்பள உயர்வு நடைமுறைக்கு வருவதாக கூறினார். மேலும், வெண்பாக்கம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் உறுதியளித்தார். தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

1046 views

பிற செய்திகள்

சென்னையில் 4 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை

சென்னையில் நான்கு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

8 views

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

34 views

ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

19 views

காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி

காவல்துறையினர் பரிசுப் பொருட்கள் மற்றும் வரதட்சணை வாங்கக் கூடாது என டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

20 views

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

15 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.