அனைத்துக் கட்சி கூட்டம் : திமுக குற்றச்சாட்டு - அதிமுக பதில்
பதிவு : ஜூலை 09, 2019, 02:59 PM
மாற்றம் : ஜூலை 09, 2019, 03:01 PM
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவிற்கு வேண்டப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
பேரவையில் கேள்வி நேரம் முடிந்தபின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். பேரவையில் உறுப்பினர்களாக இருந்தவர்களின் கட்சிகளுக்கு அழைப்பு விடு்க்காதது ஏன் கேள்வி எழுப்பிய துரைமுருகன், அதிமுகவிற்கு வேண்டப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதில் அளித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், முன்னேறிய வகுப்பினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, பல்வேறு அரிய கருத்துக்களை கூறியதாக தெரிவித்தார்.

அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தபிறகு அரசு உரிய முடிவை எடுக்கும் என்றும் கூறினார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட துரைமுருகன், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என கூறிவிட்டு, உங்களுக்கு வேண்டப்பட்ட கட்சிகளை மட்டும் அழைத்தது சரியா'' என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் குறுக்கிட்டு, இந்திய ஜனநாயக கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பன்னீர் செல்வம், கட்சிகளை அழைப்பதில் பாரபட்சம் காட்டவில்லை எனவும், இந்த குறை இனி நடக்காது எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7211 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1670 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4815 views

பிற செய்திகள்

தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன்

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவும், அமமுகவில் மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்த ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்.

0 views

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு... கோவையை சேர்ந்த 3 பேர் கைது

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததாக கோவையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

25 views

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்டவற்றில் முறைகேடு : மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாக ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

15 views

பூக்குழியில் விழுந்து பூசாரி படுகாயம் : பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியீடு

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது..

23 views

பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு - "புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?"

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 views

கஞ்சா போதையோடு வந்த கும்பல் சரமாரி தாக்குதல்

தாம்பரம் அருகே கஞ்சா போதையோடு வந்த 10 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

171 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.