"மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்" - நடவடிக்கை எடுக்கக்கோரி, அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்
பதிவு : ஜூன் 27, 2019, 12:02 AM
தமது மகன் குறித்து, தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேரில் புகார் அளித்தார்.
தமது மகன் குறித்து, தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேரில் புகார் அளித்தார். கடந்த 2 நாட்களாக குடிபோதையில் இளைஞர் ஒருவர், போலீஸாருடன் தகராறு செய்வதாக  வீடியோ ஒன்று வெளியாகி, சமூக வலை தளங்களில் பரவியது. இந்த இளைஞர் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் மகன் என்று, அதில் பதிவிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அமைச்சர் சி.வி. சண்முகம், இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை நேரில் சந்தித்து, புகார் மனு அளித்தார். அதில், தமது பெயரையும், மகனின் நற்பெயரையும் கெடுக்கும் வகையில், தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து, கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1542 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

103 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

14 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

65 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

16 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

நீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.