திரைமறைவில் ஆதரவுக்கரம் நீட்டும் பாஜக - மேகதாது விவகாரம் குறித்து ஸ்டாலின் கண்டனம்
பதிவு : ஜூன் 24, 2019, 07:37 PM
மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என, அடம்பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. திரைமறைவில், ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரி​வித்துள்ளார்.
மேகதாது அணை பிரச்சினையில் அ.தி.மு.க. அரசு, மெத்தனமாக இருக்காமல், உச்ச நீதிமன்றத்தை அணுகி, மேகதாது அணை கட்டுவதற்கு தாமதமின்றி தடை உத்தரவை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் தான் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கூறுவது  வேடிக்கையாக உள்ளதாகவும், இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன்  விளையாடும் விபரீத முயற்சி என்றும் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவினை, கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், அதற்காக, சுற்றுப்புறச் சூழல் அனுமதியைக் கொடுக்க முடியாது என அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.  காவிரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு,  இரு மாநில உறவுகளைப் பாதிக்கும் இத்தகைய முரண்பட்ட செயல்களையும், சட்ட விரோத நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

777 views

பிற செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதல்வராக முடியாது - அர்ஜுன் சம்பத்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

2 views

உணவு பொருள் அட்டைகளில் கலோரி, சர்க்கரை அளவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

நோய் தடுப்பு சுகாதார கல்வி குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று பேரவையில் பூங்கோதை ஆலடி அருணா வலியுறுத்தியுள்ளார்.

7 views

சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப்படம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படத்தை வரும் 19 ஆம் தேதி முதலமைச்சர் திறந்துவைக்க உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

20 views

பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை - ஆ.ராசா

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படை தன்மையே இருக்காது என்று திமுக உறுப்பினர் ஆ.ராசா மக்களவையில் தெரிவித்தார்.

29 views

மாங்கனி திருவிழா கோலாகலம் : போட்டி போட்டுக்கொண்டு மாம்பழங்களை பிடித்த பொதுமக்கள்

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

10 views

சொத்து பிரச்சினையால் பெற்ற தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்

பெற்ற தாயையே, தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரி அருகே நடந்துள்ளது.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.