தண்ணீர் பிரச்சினை - திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
பதிவு : ஜூன் 24, 2019, 07:30 PM
தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அரசைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தி.மு.க.வினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் : 

தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத  அரசைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் எம்.எல்.ஏ. சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது காலிக்குடங்களை வைத்து, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

கிருஷ்ணகிரி : 

கிருஷ்ணகிரியில் தி.மு.க. செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கண்டன கோஷங்களை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் காலிக் குடங்களுடன் கலந்து கொண்டனர். 

ஒசூர் : 

ஒசூரில் தி.மு.க. தளி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் காலி குடங்களுடன், கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் :

மதுரை மாவட்டம்,  திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் இலவச குடங்கள் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பால், குடங்களை வாங்க பெண்கள் உள்ளே நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

955 views

பிற செய்திகள்

சாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

9 views

ராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

13 views

சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? என்பது குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்.

30 views

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

21 views

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை - துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

15 views

மதுராந்தகம் காவல்நிலையத்தில் திடீர் சோதனை - லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி

மதுராந்தகம் மதுவிலக்கு காவல்நிலையம் மற்றும் காவல்துறை ஆய்வாளரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோனையில் ஈடுபட்டுள்ளனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.