மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு மண்டப பணிகள் - முதலமைச்சர் ஆய்வு
பதிவு : ஜூன் 18, 2019, 11:02 PM
மாற்றம் : ஜூன் 19, 2019, 01:58 AM
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் இன்னும் ஐந்து மாதங்களில் திறந்துவைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் 50 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் நினைவு மண்டப பணிகளை, முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். அப்போது, ஜெயலலிதா நினைவிடத்தில், முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். அப்போது, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டு வரும் நினைவு மண்டபத்தின் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துவிட்டதாகவும், இன்னும் 5 மாதத்திற்குள் நினைவு மண்டபம் திறந்துவைக்கப்படும் எனவும் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.