"குடிநீர் புகார் - அலட்சியம் செய்தால் நடவடிக்கை" : அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை
பதிவு : ஜூன் 18, 2019, 09:31 AM
குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது, அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது, அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில்,  குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலர் ஹர்மேந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வாரிய இயக்குநர் மகேஸ்வரன், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குநர் ஹரிஹரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

பிற செய்திகள்

கொரோனா இன்னும் தீவிரமாகும் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், கொரோனாவின் தாக்கம், வரும் அக்டோபரில் உச்சத்தில் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

410 views

அரசு விதிமுறைகளின்படியே கிருமி நாசினி வாங்கப்பட்டது" - கும்பகோணம் ஒன்றிய பெருந்தலைவர் விளக்கம்

அரசு விதிமுறைகளின்படியே கிருமிநாசினி வாங்கப்பட்டது, என்றும், இதில் எந்த ஊழலும் நடைபெற வில்லை என,கும்பகோணம் ஒன்றிய பெருந்தலைவர் காயத்திரி விளக்கம் அளித்துள்ளார்.

10 views

"யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி தேர்வு" - பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு

யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி தேர்வினை நடத்திக்கொள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

41 views

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் திடீர் மாற்றம் - உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு

உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் அவசர வழக்குகளை விசாரிப்பர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

40 views

பொது தேர்வு பணிகளுக்காக அரசு பேருந்துகள் இயக்கம் - ஜூன் 8-ந் தேதி முதல் 25 வரை இயக்கப்படும் என்று அறிவிப்பு

பொது தேர்வு பணிகளுக்காக சென்னையில் வரும் 8 -ம் தேதியிலிருந்து 41 வழித்தடங்களில் மாநகர பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன.

52 views

தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் - குடிபோதையில் காரில் இரு முறை வலம் வந்து வெறிச்செயல்

குடிபோதையில் காரில் வந்த மர்ம நபர்கள் பொதுமக்களை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

737 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.