ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் : பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இன்றும், எம்.பி.க்கள் பதவியேற்கும் நிகழ்வு நடக்கிறது.
ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் : பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
x
நாடாளுமன்ற  கூட்டத்தொடரில், இன்றும், எம்.பி.க்கள் பதவியேற்கும் நிகழ்வு நடக்கிறது. மக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 20 ந்தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். ஜூலை 26ஆம் தேதியுடன் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. இந்த கூட்டத் தொடரில் 38 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்